கிழக்கு மக்களுக்கு பயனுள்ள வரவு செலவுத் திட்டம் : விநாயகமூர்த்தி முரளிதரன்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாணத்துக்கு மிகவும் பயனுள்ள ஒரு வரவு செலவுத் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 4ஆவது வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கு இவ்வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையால் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறந்ததொரு வரவு செலவு திட்டமென அவர் தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் விவசாயம் போன்றவற்றை மேற்கொள்வதற்கான வளங்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. அந்தவகையில் இம்முறை ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply