உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் செயற்கைக்கோளை ஏவியது இந்தியா
பருவநிலை மாற்றத்தைக் கண்காணிக்க உதவும் இன்சாட் – 3டிஆர் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி – எஃப்05 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்தது.வியாழக்கிழமை மாலை 4.50 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.ராக்கெட் ஏவப்பட்ட 17 நிமிடங்களில், அதில் பொறுத்தப்பட்டிருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் விடப்பட்டது.
முன்னதாக, இந்த ராக்கெட் மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிரையோ எஞ்சினில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட தாமதத்தால், மாலை 4.50-க்கு ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த இன்சாட் செயற்கைக்கோள்களின் மூலம் இந்தியா தவிர, வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், செஷல்ஸ் தீவு, இலங்கை, தான்சானியா உள்ளிட்ட நாடுகளின் பருவநிலை மாற்றங்களயும் கண்காணிக்க முடியும். இந்த செயற்கைக்கோள் பத்தாண்டுகளுக்கு வேலை செய்யும்.
இந்த செயற்கைக்கோளின் எடை 2,211 கிலோவாகும்.
இந்தியா நீண்ட காலமாகவே கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை அடைய போராடிவந்தது. 1990-களின் மத்தியிலிருந்து இந்தத் தொழில்நுட்பத்தை தாமாகவே அடைய முயற்சித்துவந்த இஸ்ரோ, 2010ஆம் ஆண்டிலிருந்து அதனைப் பரிசோதித்து வருகிறது.
இதற்கு முன்பாக, மூன்று முறை சோதனை முறையில் கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ஏவப்பட்டிருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply