புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் பொட்டு அம்மான்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை அதன் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஏற்றுக் கொண்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வளையப் பகுதியில் மக்களோடு மக்களாக கலந்து மறைந்து இருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
புலிகள் தலைவர் பிரபாகரன் மன உளைச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இது பற்றி கூறிய ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா, ‘இந்த தகவலானது உளவுத்துறை இடைமறித்து கேட்ட தகவலின் அடிப்படையிலானது. இதனை ராணுவத்தால் உறுதிப்படுத்த இயலவில்லை’ என்றார்.
பொட்டு அம்மானுக்கு போர்முனையில் நேரடி அனுபவம் இல்லாததால் அவர் வேலவன் என்பவரை அந்த இயக்கத்தின் தளபதியாக நியமித் திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வளையப் பகுதியை விட்டு வெளியேறி தப்ப முயற்சிப்போர் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று விடுமாறு புலிகளுக்கு பொட்டு அம்மான் உத்தரவிட்டிருப்பதாக ராணுவத்திடம் தஞ்சம் அடைந்தவர்களை மேற் கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
புதுக்குடியிருப்பில் புலிகள் இயக்கம் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்துஅவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அப்பாவி பொதுமக்கள் தான் புலிகளுக்கு இப்போதுள்ள ஒரே நம்பிக்கை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. புலிகளை முழுவதுமாக ஒழிக்க கடந்த சில காலமாக கடும் தாக்குதல்களை நடத்தி வந்த இலங்கை ராணுவம், அவர்களிடமிருந்து எல்லா பகுதிகளையும் கைப்பற்றியது. இறுதியாக புலிகளின் கடைசி புகலிட மாக விளங்கிய புதுக்குடி யிருப்பும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply