பிரான்சில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு – கியாஸ்சிலிண்டர் காருடன் 3 பெண்கள் கைது

parisபிரான்ஸ் தலைநகர் பாரீசில் சில மாதங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகினர். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரீசில் நோட்ரீ டேம் கதீட்ரல் அருகே கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பிய கார் சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்தது.

அது ஐனஸ் மதானி (19) என்ற பெண்ணின் தந்தைக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது ஐனஸ்மதானி ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் சிரியாவுக்கு செல்ல பலமுறை முயன்றதும் தெரிய வந்தது.

மேலும் இவளுடன் மேலும் 2 பெண்கள் இருப்பதும் தெரியவந்தது. எனவே, பாரீஸ் புறநகரான புஸ்சி-செயின்ட்-அந்தோணி என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த ஐனஸ் மதானி மற்றும் 2 பெண்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

ஐனஸ் மதானி கைப் பையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் அவருக்கு தொடர்புடைய ஒரு கடிதம் இருந்தது. இவளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சாரா எச்(23) இவர்கள் கியாஸ் சிலிண்டரை காருடன் வெடிக்க செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் எங்கு தாக்குதல் நடத்த திட்ட மிட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இவை தவிர கோடை காலத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது

தற்போது கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இவர்களின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஐனஸ் மதானிக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply