போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன் குண்டு மழை சிரியாவில் 105 பேர் கொன்று குவிப்பு

siriyaசிரியாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன் கிளர்ச்சியாளர்கள் பிடியின்கீழ் உள்ள பகுதிகளில் அதிபர் ஆதரவு படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில் 105 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.உள்நாட்டுப்போர்

சிரியாவில் 5 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ மாகாணம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில், இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி தாக்குதல்களை தொடர்ந்து வந்தனர்.இதையடுத்து சிரியா முழுவதும் போர் நிறுத்தத்தை அமல்படுத்த அமெரிக்காவும், ரஷியாவும் முயற்சி எடுத்தன.போர் நிறுத்தம்

 

இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவும் 2 தினங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி 10 நாள் போர் நிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) மாலை அமலுக்கு வருகிறது.இந்த போர் நிறுத்த உடன்படிக்கை பரவலாக உலக நாடுகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த துருக்கியும், ஐரோப்பிய யூனியனும், இது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.வாய் திறக்காத ஈரான்

 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ள எதிர்க்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து கருத்து கூறும்போது, ‘‘போர் நிறுத்த திட்டம் கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆனால் இதை எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி கூடுதல் தகவல்கள் தேவை’’ என குறிப்பிட்டார்.சிரியா அரசு போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு விட்டது. அதே நேரத்தில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவைப் போன்று ஆதரவு அளித்து வருகிற ஈரான், இதுபற்றி வாய் திறக்கவில்லை.குண்டு மழை

 

இந்த நிலையில், இத்லிப் மாகாணத்தில் உள்ள ஒரு காய்கறிச்சந்தை மீது குறிவைத்து நேற்று முன்தினம் சிரியா படைகள் குண்டுமழை பொழிந்தன. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதை சிரியா ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் உறுதி செய்துள்ளனர்.இதேபோன்று அலெப்போ மாகாணத்தில் நடந்த வான் தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டனர்.இவ்விரு தாக்குதல்களிலும் பல கட்டிடங்கள் தரை மட்டமாகிவிட்டதாகவும், பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல்

 

இதற்கிடையே சிரியா அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள டெயிர் அல் ஜவர் நகரில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா ஊடகங்கள் கூறுகின்றன.இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை சிரியா முழுவதும் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். 10 நாட்கள் இந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தால், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டாக வான்தாக்குதல்கள் நடத்தும்.துருக்கி வான்தாக்குதல்

 

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியதில், ஐ.எஸ். அமைப்பினர் 20 பேர் கொல்லப்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply