‘அமெரிக்காவுக்கு வடகொரியா ‘திடீர்’ கோரிக்கை ‘எங்களை அணுஆயுத நாடாக அறிவிக்க வேண்டும்’
வடகொரியா கடந்த 9–ந் தேதி ஐந்தாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி, அது வெற்றி அடைந்திருப்பதாக அறிவித்தது. வடகொரியாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், வடகொரியாவை சட்டப்பூர்வமான அணுஆயுத நாடாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு அந்த நாடு திடீர் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வடகொரியாவின் போர்த்திறன் சார்ந்த நிலையை– சட்டப்பூர்வ அணுஆயுத நாடு என்கிற அங்கீகாரத்தை மறுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முயற்சித்து வருகிறார். சூரியனை உள்ளங்கையால் மறைக்க முயற்சிக்கும் இந்த செயல், முட்டாள்தனமான நடவடிக்கை’’ என கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே 5–வது முறையாக அணுகுண்டு வெடித்து சோதித்துள்ள வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது.ஆனால் இதை வடகொரியா சாடி உள்ளது. இதுபற்றி வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ‘‘ஒபாமாவை சுற்றியுள்ள குழுவினர், அர்த்தமற்ற பொருளாதார தடைகள் குறித்து பேசி வருகிறார்கள். இதை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது’’ என கூறியதாக கே.சி.என்.ஏ., செய்தி நிறுவனம் கூறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply