ஹிலரிக்கு உடல்நலக் குறைவு, கலிஃபோர்னிய தேர்தல் பரப்புரை ரத்து
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் நுரையீரல் வீக்கத்தால் அவதிப்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.பொது நிகழ்ச்சி ஒன்றில் உடல்நலமின்றி அவதிப்பட்டதை அடுத்து, ஹிலரியின் நோய் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் அவருடைய மருத்துவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனால், தேர்தல் பரப்புரைக்காக கலி.போர்னியா செல்வதை அவர் ரத்து செய்திருக்கிறார்.ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியிலிருந்து சுகவீனம் காரணமாக அவர் முன்னதாகவே செல்ல வேண்டியதாயிற்று.கால் மூட்டு பிரச்சனையால், ஹிலரி காருக்குள் ஏறுவதற்கு உதவி செய்யப்படும் காணொளி பதிவு இணையத்தில் பிரசுரமானது.
பின்னர், பொது மக்களிடைய மீண்டும் தோன்றிய ஹிலரி தற்போது நன்றாக உணர்வதாக செய்திளார்களிடம் தெரிவித்தார்.அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டெனால்ட் டிரம்ப் தன்னுடைய போட்டியாளரின் உடல் நலம் குறித்து முன்னதாக கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply