ஹஜ் புனித யாத்திரை: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் 20 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்

saudiஹஜ் யாத்திரையின் நிறைவாக நேற்று நடந்த சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மெதீனா நகரங்களில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத் திரையில் 150 நாடுகளில் இருந்து 20 லட்சம் பேர் குவிந்தனர். இந்தியாவில் இருந்து மட்டும் 1.36 லட்சம் பேர் சென்றுள்ளனர்.புனித நகரான மெக்காவில் தொழுகையை முடித்த முஸ்லிம் கள் நேற்று முன்தினம் மினாவுக்கு சென்றனர். அங்கு அவர்கள் தங்கு வதற்காக தீப்பிடிக்காத 25 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந் தன. அன்றிரவு முழுவதும் குர்ஆன் ஓதியபடி கூடாரங்களில் தங்கியிருந்தனர்.

பின்னர் சாத்தான் மீது கல் லெறியும் நிகழ்ச்சிக்காக நேற்று காலை அராபத் மலையில் குவிந் தனர். அங்கு சாத்தானின் தூண் மீது கற்களை வீசினர். இந்த நிகழ்ச்சி 2 நாட்களுக்கு நடைபெறும்.

கடந்த ஆண்டு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசல் ஏற்பட்டு 2300 பேர் பலியாகினர். எனவே இந்த ஆண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. கண் காணிப்பு பணியில் ஹெலிகாப்டர் கள் பயன்படுத்தப்பட்டன. ஆயிரக் கணக்கான போலீஸார், தன்னார்வ ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈரான் புறக்கணிப்பு

சவுதி அரேபியாவின் மூத்த மத குரு அப்துல் அசிஸ் அல் ஷேக், ஈரானியர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனைக் கடுமையாக கண்டித்த ஈரானின் மூத்த மத குரு அயதுல்லா கொமெனி ஹஜ் புனித யாத்திரையை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்படி இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் ஈரானியர்கள் பங் கேற்கவில்லை. அதற்குப் பதிலாக ஈரானின் புனித தலங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply