காஷ்மீரில் வன்முறையில் காயமடைந்த வாலிபர் பலி: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு

ädenguகாஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கடந்த ஜூலை 9-ந்தேதி முதல் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதில் அவ்வப்போது உயரிழப்புகளும், படுகாயமடையும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் குல்காம் மாவட்டத்தின் காசிகுண்ட் பகுதியில் கடந்த 5-ந்தேதி நடந்த சுதந்திர ஆதரவு பேரணியில் வன்முறை வெடித்தது. எனவே பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரவை துப்பாக்கியால் சுட்டும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

 

 

இதில் நவ்போரா பகுதியை சேர்ந்த ரசிக் அகமது கான் என்ற வாலிபர் ரவை குண்டு பாய்ந்து காயமடைந்தார். ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலையில் மரணமடைந்தார். இவரையும் சேர்த்து கடந்த 69 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.

 

 

ரசிக் அகமது கான் உயிரிழந்த தகவல் அறிந்ததும் குல்காம் மற்றும் பல மாவட்டங்களில் இன்று மீண்டும் வன்முறை வெடித்தது. பாதுகாப்பு படையினரை கண்டித்து மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply