டெல்லியில் டெங்கு காய்ச்சல் பலி 18 ஆக உயர்வு

டெல்லியில்201609160137329630_aiims-reports-9-deaths-due-to-dengue-in-delhi-death-toll_secvpf கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு 1,100-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து இதுவரை டெங்கு காய்ச்சல் தாக்கிய 9 பேர் உயிரிழந்துள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

 

 

இதுதொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 96 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 56 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் உத்தரபிரதேசம், 10 சதவீதம் பேர் பீகார், மீதிப்பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply