மனைவி விவாகரத்துக்கு ரூ.7400 கோடி வழங்கிய சீன தொழில்அதிபர்

chinaசீனாவில் கம்ப்யூட்டர் தொழில் நிறுவனம் நடத்தி வருபவர் ஷுயூ யகுய். இவரது மனைவி லி குயாங். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.எனவே விவாகரத்து செய்ய முடிவு செய்து பெய்ஜிங் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்தது.இந்த நிலையில் தொழில் அதிபர் ஷுயூ யகுய் தனது மனைவி லி குயாங்குக்கு ரூ.7400 கோடி (1.1 பில்லியன் டாலர்) ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்.

அதை தொடர்ந்து அவர்களுக்கு இடையே விவாகரத்து ஆனது. இது சீனாவில் மிக உயர்ந்த விவாகரத்து ஆக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் இத்தம்பதி உலகின் இளம் தொழில் அதிபர்கள் பட்டியலில் 11-வது இடத்தை பிடித்து முன்னிலையில் இருந்தனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.23,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply