தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடு: ஐ.நா. ஜோன்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடு களை நடத்தி வருவதாக எமக்கு தொடர்ச்சியாக அறிக்கைகள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.லண்டனில் வெளியாகும் கார்டியன் எனும் செய்திப்பத்திரிகைக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புலிகள் தப்பிவரும் சிவிலியன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதுடன் அவர்கள் பயணிக்கும் படகுகளையும் தாக் கியழித்து வருகின்றனர்.அங்கிருந்து தப்பிச் செல்ல நினைப்பவர்களை தம்முடன் இணைந்து போர் புரியுமாறு புலிகள் வற்புறுத்துகின்றனர். சிவிலியன்கள் தப்பி வருவதனை புலிகள் விரும்பவில்லை யென்பது மாத்திரம் நிச்சயம். அப்படியிருந்தபோதும் பல சிவிலியன்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கிருந்து தப்பி வருகிறார்கள்.
இது மிகவும் சிக்கலான சூழ்நிலையெனவும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply