பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (சனிக் கிழமை) 66-வது பிறந்த தினமாகும்.இதையொட்டி அவருக்கு உலகத் தலைவர்கள், இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வருகிறது. பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மகிழ்ச்சியான உங்கள் பிறந்த தினத்தில், மிகச் சிறப்பான எதிர்காலத்துக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தன் பிறந்த நாளை முன்னிட்டு தன் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்துக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த நிகழ்ச்சிகளை கின்னஸ் சாதனையாக மாற்ற குஜராத் பா.ஜ.க.வினர் திட்ட மிட்டுள்ளனர்.
குஜராத்தில் நவசாரி எனுமிடத்தில் 11,223 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்கவுள்ளார். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது.
அது போல 1000 பேருக்கு சக்கர நாற்காலி, 1000 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கி கின்னஸ் சாதனை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply