கிழக்கு மா.ச உறுப்பினர் அமீர்தீன் தேசிய காங்கிரஸில் இணைந்துள்ளார்

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கலாநிதி வி. அமீர்தீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டுவிலகி தேசிய காங்கிரஸுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கலாநிதி வி. அமீர்தீன்  தெரிவித்தார். இம்மாத முடிவிற்குள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தேசிய காங்கிரஸுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவின் தலைமையின் கீழ் செயற்படப் போவதாகவும் அமீர்தீன் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போக்கு அண்மைக்காலமாக வித்தியாசப்படுவதாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் விடயத்தில் அசிரத்தை காட்டுவதாலும் அதிலிருந்து விலகுவதற்கு நான் தீர்மானித்தேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் அக்கட்சிக்கு சவாலாக கிழக்கு மாகாணத்திலும், தேசிய ரீதியிலும் நிதானமாக செயற்படும் தேசிய காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அதாஉல்லாவின் தலைமையின் கீழ் இணைந்து மக்களின் நலனுக்காக உழைக்கவுள்ளேன்.மக்களை ஏமாற்றி முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களுடன் இருப்பதைவிட மக்களின் நலனுக்காகவும் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைக்காக பாடுப ட்டு வரும் அமைச்சர் அதாஉல்லாவின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயற்படப் போவதாகவும் கலாநிதி வி. அமீர்தீன் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply