அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயம்
அமெரிக்காவின் மின்னெசோட்டா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவன் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மின்னெசோட்டா நகரில் உள்ள செயின்ட் கிலவுட்ஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்துக்குள் இன்று நுழைந்த ஒரு மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான்.
இதை கண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் பீதியுடன் அலறியபடி வெளியே ஓடினர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து சேர்வதற்குள் தாக்குதல் நடத்திய நபர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த 8 பேர் செயின்ட் கிலவுட்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அந்த வணிக வளாகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு தாக்குதல் நடத்தியவன் யார்?, தாக்குதலுக்கான நோக்கம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply