அணி சேரா நாடுகள் மாநாட்டில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியது பாகிஸ்தான்
வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, செப்டம்பர் 17, 18ஆம் நாள்களில் நடைபெற்றது. பாகிஸ்தான் தரப்பில் உயர் ஆணையர் அஜிஷ் தலைமையிலான குழு இந்த மாநாட்டில் கலந்து கொண்டது. மாநாட்டில் அசிஷ் பேசியதாவது:-
ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின் படி ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட முடியாது.
60 ஆண்டுகளுக்கு பிறகும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தன்னாட்சி சுயநிர்ணய உரிமைக்காக காத்திருக்கின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் கொடூரத்தினை நாம் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதம் மற்றும் தீவிர வன்முறை தொடர்பான அணிசேரா நாடுகள் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பாகிஸ்தான் முழுமையாக ஏற்கிறது.
அனைத்து விதமான தீவிரவாதத்தையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது. பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான மக்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்துள்ளது.
இவ்வாறு பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply