புது வருடப் பரிசுப் பொருட்களுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் புறப்படுகிறது
வன்னியில் புதுமாத்தளன் மோதல் தவிர்ப்பு பகுதிக்குள் தங்கியுள்ள மக்களுக்கு புதுவருட பரிசுப் பொருட்களுடன் மேர்க்ஸ் டப்ளின் சரக்குக்கப்பல் எதிர்வரும் 21ஆம் திகதி ‘உறவைத் தேடிய’ பயணத்தை ஆரம்பிக்கிறது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புதுமாத்தளன் பகுதி மக்களுக்கு பரிசுப் பொருட்களுடன் உறவைத் தேடிய பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில்ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் இப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு புதுவருட பலகாரங்கள், கேக் வகைகள், உடு புடவைகள், குழந்களுக்கான உடுபுடவைகள், உள்ளாடைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், ஆரோக்கிய துவாய்கள், குழந்தைகளுக்கான பேபி கொலோன் வகைகள், சவுக்காரங்கள், குழந்தைகள் பால்மா வகைகள் மற்றும் உணவு வகைகள் உள்ளிட்டபொருட்கள் அடங்கிய பொதிகள் சுமார் 50 லொறிகளில் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மேற்படி பொருட்களை இலவசமாகவே அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க இன்று வரை பெரும் தொகையான வர்த்தகர்கள் முன்வந்துள்ளதாகவும் தொடர்ந்தும் தம்மோடு தொடர்பு கொண்டவண்ணமே உள்ளதாகவும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
தேவேளை, திருமலையிலிருந்து புதுமாத்தளன் மக்களுக்கான பரிசுப் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கு வாடகையோ, கட்டணமோ அறவிடப்போவதில்லை என்றும் கப்பல் உரிமையாளர் அறிவித்துள்ளதாகவும் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
புதுமாத்தளன் பகுதியிலுள்ள தமது உறவு களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க முன்வந்த அனைத்து வர்த்தகர்கள் நலன் விரும்பிகளுக்கு நன்றிகளை தெரிவிப்பது டன் புடவைகள், உள்ளிட்ட குழந்தைகளு க்கான பொருட்களையும் வழங்க முன்வரு பவர்கள் இருப்பின் தம்மோடு தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply