ரஷ்யா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: அதிபர் புதின் ஆதரவு கட்சி வெற்றிபெறும் என்று கணிப்பு

puttinரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு நேற்று(18-ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு புதினுக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்ற பிறகு நடைபெற்ற முதல் சுதந்திரமான தேர்தல் இது தான். சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதின் வாக்களித்தார். 

 

புதினின் ஆட்சி காலத்தில் அதிக பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதிலும், கீழ் சபையில் புதினின் ஒருங்கினைந்த ரஷ்யா கட்சி தனது பெரும்பான்மையை தக்க வைத்து கொள்ளும் என்று தெரிகிறது.

 

இந்த கீழ் சபை தேர்தலானது 2018-ம் ஆண்டில் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply