மஹிந்தவின் தோல்வியில் மகிழ்ச்சி அடைந்த இந்தியா

mahindaகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்தவின் ஆட்சியின் போது அவர் மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அதில் முதலாவது தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மஹிந்த அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், இரண்டாவது அதிகமாக சீனாவின் பக்கம் மஹிந்த அரசு நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தமை இந்திய அரசை அதிருப்பதி அடையச் செய்த முக்கிய இரண்டு விடயங்கள் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை மஹிந்த அரசு தோல்வியடைந்து தற்போழுது ஆட்சியில் உள்ள நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் என இந்திய அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply