ஜல்லிக்கட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் இந்திய தூதரகம் முன்பு ‘பீட்டா’ அமைப்பினர் நடத்தினர்
இந்தியாவில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கூடாது என்று வலியுறுத்தி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வின் இங்கிலாந்து கிளை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், மாட்டின் தலை போன்ற முகமூடியை அணிந்து இருந்தனர்.‘ஜல்லிக்கட்டு–மாட்டுக்கும், மனிதருக்கும் தீங்கானது’ என்றும், ‘இந்தியாவே, கொடூரமான ஜல்லிக்கட்டுக்கு தடையை நீடிக்கச்செய்’ என்றும் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.சுப்ரீம் கோர்ட்டு தடையை முறியடித்து ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதுபோல், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply