பழம்பெரும் பாடகி எஸ். ஜானகி ஓய்வால் ரசிகர்கள் அதிர்ச்சி

janakiபழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி, ஒரு மலையாளப் பாடலுடன் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.1957ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான எஸ். ஜானகி. இந்திய சினிமா துறையில் பல எண்ணற்ற பாடல்களை தனது இனிமையான குரலால் பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசைக்கான ’நைட்டிங்கேல்’ என்று அறியப்படும் எஸ்.ஜானகி, ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் இசைத்துறையிலிருந்து விடைபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

மலையாளத்தில் 10 கல்பனகள் படத்தில் இடம்பெறும் தாலாட்டுப் பாடல் தான் தனது இசையுலக வாழ்வின் கடைசி பாடல் என்று ஜானகி அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதுமையின் காரணமாகவும், இசையுலக வாழ்வில் இருந்து சற்று ஓய்வு தேவைப்படுவதாலும் இந்த முடிவை அறிவித்துள்ளதாக எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஒரியா உட்பட இந்தியாவின் பல மொழிகளில் சுமார் 48,000 பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகளை பெற்றுள்ளார். இந்திய இசைத்துறைக்கு பல பெருமைகளை பெற்றுதந்த ஜானகிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கவுரப்படுத்தியது.

ஜானகியின் இறுதிப் பாடலை ஒலிப்பதிவு செய்த இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வரின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த பாடலை ஜானகி பாடியுள்ளார். தாலாட்டுப் பாடல்கள் ஜானகியின் விருப்பமான மெட்டு என்பதால் உடனே 10 கல்பனகள் படத்தில் அவர் பாடியுள்ளார். மலையாளத்தில் தான் கடைசிப் பாடலை பாட வேண்டும் என்ற திட்டம் ஏதும் இல்லை எனவும் தற்செயலாக உருவான ஒரு விஷயம் தான் எனவும் தனது அறிவிப்பிற்கு எஸ். ஜானகி காரணம் கூறியுள்ளார்.

தமிழில் இறுதியாக எஸ்.ஜானகி பாடியது ‘திருநாள்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தையும் யாரோ…’ என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply