ஏமனில் சவுதி படைகளின் வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலி
ஏமனில் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டிலிருந்த துறைமுக நகரமான ஹோடைடாவில் சவுதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி ஆதரவுப் படைகளுக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.அதிபர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் ஹவுத்தி கிளர்ச்சிப் படை மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது ஏமனின் பெரும்பகுதி கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டிலிருந்த ஹோடைடா மீது சவுதி படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.
ஏமனில் கிளர்ச்சிப் படைக்கும் அரசுக்கும் மோதல் ஏற்பட்டது முதல் நடைபெற்ற சண்டையில் இதுவரை 6,600 பேர் பலியாகியானதாக ஐ. நா.வின் அறிக்கை கூறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply