ராம்குமார் பிரேத பரிசோதனையில் எய்ம்ஸ் மருத்துவர் : உயர் நீதிமன்றம் பரிந்துரை

ramgumarராம்குமார் பிரேத பரிசோதனையில் எய்ம்ஸ் மருத்துவரை சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பிரேத பரிசோதனையை வரும் 27-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு, 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மருத்துவக் குழுவில் 5-வதுநபராக தனியார் மருத்துவரை சேர்க்க மறுத்துவிட்டார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை சேர்த்துக்கொள்ளலாம் என்று நீதிபதி பரிந்துரைத்தார். மேலும், இந்த பிரேத பரிசோதனையை வரும் 27ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னணி:

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். மின் வயரைக் கடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. 4 பேர் கொண்ட அரசு மருத்துவர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பிரேத பரிசோதனையில் தங்களது தரப்பில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனை தடயவியல் நிபுணர் சம்பத்குமாரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரி உயர் நீதி மன்றத்தில் ராம்குமாரின் தந்தை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. தனியார் மருத்துவரை அனுமதிக்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்தால், இந்த வழக்கு 3-வது நீதிபதியின் உத்தரவுக்காக தள்ளி வைக்கப்பட்டது.

ராம்குமாரின் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, விஜேந்திரன் ஆகியோர் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் முன்பாக இதுபற்றி முறையிட்டனர். அப்போது இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக என்.கிருபாகரன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று விசாரணை நடத்திய மூன்றாவது நீதிபதி கிருபாகரன், மருத்துவ குழுவில் 5-வதுநபராக தனியார் மருத்துவரை சேர்க்க மறுத்துவிட்டார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை சேர்த்துக்கொள்ளலாம் என்று நீதிபதி பரிந்துரைத்தார். மேலும், இந்த பிரேத பரிசோதனையை வரும் 27ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply