தமிழக வீரர் மாரியப்பன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளையாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் உள்ளது. இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் புதிய வரலாறு படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட நான்கு வீரர்களும் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
’’தங்கள் அயராத உழைப்பால் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்’’ என இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply