சர்வதேச அளவில் அனைத்து நோய்களை ஒழிக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி: மார்க் ஜுக்கர்பெர்க்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு விழாவில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது மனைவி சான் ஷுகர் பெர்க்குடன் கலந்து கொண்டார்.அப்போது சர்வதேச அளவில் நோய்களை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க இருப்பதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அடுத்த தலைமுறையின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து விதமான நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் தேவைப்படுகிறது. அவற்றை உருவாக்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக 300 கோடி டாலர் அதாவது ரூ.20 ஆயிரம் கோடி நிதியை அடுத்த 10 ஆண்டுகளில் ஒதுக்க இருக்கிறோம்.
முதல் கட்டமாக 60 கோடி டாலர் (சுமார் 4 ஆயிரம் கோடி) செலவில் சான்பிரான்சிஸ்கோவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் அடுத்த தலைமுறையின் அனைத்து விதமான நோய்களை தடுக்க நமது குழந்தைகளிடம் இருந்து செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்றார்.
மார்க் ஜுக்கர்பெர்கின் மனைவி சான்ஷுகர் பெர்க் குழந்தைகள் நல மருத்துவர் ஆவார். தங்கள் சொத்தில் 99 சதவீத பங்கை பொது நலனுக்கு செலவிடப் போவதாக கடந்த ஆண்டு ஜுக்கர்பெர்க் தம்பதி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply