பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கூட்டுப்பயிற்சி இல்லை: ரஷ்யா விளக்கம்

russland’நட்புறவு 2016’ என்ற பெயரில் பாகிஸ்தான் – ரஷியா ராணுவத்தினர் முதன்முதலாக ஈடுபடும் கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக ரஷியாவில் இருந்து ராணுவ வீரர்கள் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தனர்.ரஷியா ராணுவப் படைகள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் முதன்முதலாக ஈடுபடும் இந்த கூட்டுப் போர் பயிற்சி நாளை (24-ம் தேதி) தொடங்கி அக்டோபர் மாதம் பத்தாம் தேதிவரை நடைபெறும் என பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடையிலான கூட்டுப் பயிற்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கூட்டுப்பயிற்சி இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் ”சர்ச்சைக்குரிய எந்தவொரு பகுதியிலும் கூட்டுப்பயிற்சி நடைபெறாது என்றும் கைபர் பாக்துன்கவா மாகாணத்தில் தான் நடைபெறுகிறது. ராட்டு பகுதியில் உள்ள அதி உயர் ராணுவம் பள்ளியில் கூட்டுப் பயிற்சி நடைபெறுவதாக வெளியாக உள்ள செய்திகள் தவறானவை.” என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply