பாதுகாப்பு வளைய பகுதிக்குள் புலிகள் மக்கள் மோதல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வளையப்பகுதியில் புலிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகளின் கடைசி புகலிடமாக விளங்கிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அதன் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு வளைய பகுதியில் மக்களோடு மக்களாக கலந்து மறைந்து இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் உள்ள அம்பலவான்பொக்கானை என்ற இடத்தில் பெருத்த வெடிச்சத்தமும், எந்திர துப்பாக்கி ஓசைகளும் கேட்டதாகவும், இது விடுதலைப் புலிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த சண்டையாக
இருக்கும் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடும், வெடிச்சத்தங் களும் கேட்பதற்கு முன்பு பெருந் திரளான மக்கள் அங்கு கூடியிருந்ததை பாதுகாப்பு வளையப் பகுதி எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ராணுவ படையினர் கண்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு வளையப் பகுதியில் பொதுமக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெறுகிறது என ராணுவத்தினர் சந்தேகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையப்பகுதியில் இருந்து பொதுமக்கள் தப்பி விடாமல் இருப்பதற்கு பதுங்கு குழிகள், அரண்கள் போன்றவற்றை புலிகள் ஏற்படுத்தி வருவதாகவும், 118 தமிழர்கள் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தாகவும், ராணுவம் கூறியுள்ளது.
புலிகள் இயக்கத்திற்கு தற்போது தலைமை ஏற்று இருக்கும் அதன் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான், புதிதாக நியமிக்கப் பட்டுள்ள போலீஸ் துறை தலைவர் இளங்கோவிடம் போராளிகளை அனுப்புமாறு உத்தரவிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, புதுக்குடியிருப்பின் கிழக்குப்பகுதியையும் தாண்டி ராணுவத்தினர் புலிகளை தாக்கி முன்னேறி வருவதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நந்திக்கடல் உப்பங்கழி பகுதியில் ராணுவத்தினருக்கு எதிராக புலிகள் கடும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், ஆனால் அதனை முறியடித்து புலிகளுக்கு பெருத்த சேதத்தை படை வீரர்கள் ஏற்படுத்தியதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply