விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை :அமைச்சர் மங்கள சமரவீர
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.’விடுதலைப் புலிகள் மீதான தடையை இலகுவில் அகற்ற முடியாது’ என அமைச்சர மங்கள நியூயோர்க்கின் வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்ள அமெரிக்க சென்றுள்ள அமைச்சர் மங்கள, இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.கூடுமானவரை புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு ஐரோப்பியா நடவடிக்கைகள் எடுக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தான் 2006ஆம் ஆண்டில் வெளிவிவகார அமைச்சராக பதவிவகித்த காலத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன், மிகவும் கஸ்டத்தின் மத்தியில் இந்த தடைவிதிப்புக்கு காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குறித்த தடையினை நீக்குமாறு தற்போது பரிந்துரை செய்யும் புலி ஆதரவாளர்கள் இதற்கு முதலிலும் இந்த தடையை நீக்குவதற்கு பல அர்ப்பணிப்புகளை செய்திருந்தாலும் அவை வெற்றியடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை கடந்த மாதம் அமெரிக்கா விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply