தந்தையின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி மலர் அஞ்சலி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரும் பிரதி சபாநாயருமான காலஞ்சென்ற டீ.ஏ. ராஜபக்ஷவின் 41 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு அவரது உருவச்சிலை அமைந்துள்ள தங்கல்லையில் விசேட வைபவங்கள் நடைபெற்றன. தனது தந்தையின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரோமி ராஜபக்ஷ ஆகியோர் இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply