லசந்தவின் சடலம் இன்று தோண்டி எடுப்பு
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் இன்று பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார். கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் இன்று காலை 8.30 மணிக்கு லசந்தவின் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது. தற்போது பொரளை கனத்தையில் உள்ள லசந்தவின் கல்லறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். களுபோவில வைத்தியசாலையில் அப்போது முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் குறைபாடுகள் இருப்பதால் அதனை நிவர்த்தி செய்ய இவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply