ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுப்பு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நேற்று(27) நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டி எடுக்கப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீன் கடந்த 8 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இந்த முரண்பாடுகளை கண்டறியும் வகையில் பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தேசித்திருந்தது.
இதற்கமைய முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.கொழும்பு மேலதிக நீதிவான் மொஹமட் மிஹால் பொரளை பொது மயானத்திற்கு நேற்று(27)காலை 8.45 அளவில் விஜயம் செய்ததை அடுத்து அவரது மேற்பார்வையின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு இப்பகுதியில் நேற்று(27) பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். பொரளை கனத்தை மயானத்தில் இவரது சடலம் நல்லடக்கம் செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டப்படுவதை ஆளில்லா கெமரா படம் பிடித்துச் சென்றுள்ளது. லசந்தவின் சடலம்தோண்டப்படும் பகுதிக்குள் செல்ல ஊடகவியலாளர்கள் உட்பட எவரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இப்பகுதியில் வான் வழியாக நுளைந்த ஆளில்லா சொப்பர் கெமாரா ஒன்று லசந்தவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதையடுத்து உஷாரடைந்த பொலிஸார் அப் பகுதியில் தேடுதல் நடத்தியதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply