மா.சபை உறுப்பினர்கள், வெளிநாடு செல்ல திறைசேரி அனுமதி கட்டாயம்
மாகாணசபை உறுப்பினர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்வதாயின் முன் கூட்டியே திறைசேரியின் அனுமதியைப் பெறுவது கட்டாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இருபதாண்டுகளுக்கு மேலாக மாகாண சபைகளின் அமைச்சர்கள்,உறுப்பினர்கள் அரச செலவில் வெளிநாட்டுச் சுற்றுலாக்களில் பங்கெடுத்து வந்திருக்கின்றனர்.
தற்போதும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் குழுவொன்று வெளிநாடு சென்றுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன
ஊடகங்கள் செய்திவெளியிட்டது போன்று மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பெருமளவு நிதியை வெளிநாட்டுச் சுற்றுலாவுக்காக செலவிட்டிருக்கும் விடயம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்படவில்லை. 2017 ஆண்டு முதல் மாகாண சபை உறுப்பினர்கள் சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்லுமுன் திறைசேரியின் அங்கீகாரத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டில் எஞ்சியுள்ள காலப்பகுதியிலும் ஏதாவதொரு மாகாண சபையின் பிரதிநிதிகள் கல்விச் சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்வதாயின் அதற்கு திறைசேரியின் அங்கீகாரத்தைப் பெறுவது கட்டாயம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply