சுஷ்மா சுவராஜின் பேச்சு பொய்களின் தொகுப்பு ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் அபாண்டமான பதில்

UNO ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து சுஷ்மா சுவராஜ் பேசியது ‘பொய்களின் தொகுப்பு’ என்று பாகிஸ்தான் அபாண்டமாக பதில் கொடுத்துள்ளது.பாகிஸ்தான் பதில் அறிக்கைஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்துவரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து பேசினார்.இதற்கு பாகிஸ்தான் பிரதிநிதிகள் தங்கள் பதில் அறிக்கையை ஐ.நா. பொதுச்சபையில் தாக்கல் செய்தனர். 

 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-சுஷ்மா சுவராஜின் பேச்சில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரமற்ற புகார்கள் அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம். அவரது பேச்சு பாகிஸ்தானை பற்றிய பொய்களின் தொகுப்பு. உண்மைகள் மற்றும் வரலாற்றை கேலி செய்வதாகும். இது அவரது அரசு பாகிஸ்தான் மீது கொண்டுள்ள வஞ்சகம், விரோதம் ஆகியவற்றையே பிரதிபலிக்கிறது.இந்திய பகுதி அல்லஇந்தியாவின் 5 லட்சம் பாதுகாப்பு படையினர் அப்பாவி மற்றும் ஆயுதம் இல்லாத காஷ்மீர் மக்கள் மீது நடத்திவரும் கொடூரமான தாக்குதலில் இருந்து உலகின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அவரது பேச்சு கொள்கை அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர் முன்பும் சரி, இப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. இது சர்ச்சைக்குரிய பிரதேசம்.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல தீர்மானங்கள் இயற்றியும் அதன் இறுதி நிலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

 

காஷ்மீர் மக்களின் உரிமை குறித்து அவர்களது சுய முடிவுக்கு விடுவது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அவர்களுக்கு உறுதி அளித்தது.பாகிஸ்தான் மீது பழிபோட…ஆனால் 70 வருடங்களாக அதனை நிறைவேற்றாமல் இந்தியா காஷ்மீர் மக்களை படைகள் மூலமும் ஏமாற்றியும் பாதுகாத்து வருகிறது. இது மோசமான உள்நாட்டு தீவிரவாதம், போர்க்குற்றம். இந்த கொடூர தாக்குதல்கள் குறித்து முழுமையான, பாகுபாடற்ற விசாரணை தேவை என பாகிஸ்தான் கருதுகிறது. இந்தியா உரியில் நடந்த சம்பவத்தை காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் மீது பழிபோடுவதற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது.கடந்த 50 ஆண்டுகாலமாக இந்தியா தீவிரவாதத்தை அனைத்து அண்டை நாடுகளுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ளது. தீவிரவாத குழுக்களையும் உருவாக்கி உள்ளது. பாகிஸ்தானின் பல பகுதியிலும் தீவிரவாதத்தை பயன்படுத்தி உள்ளது. சமீபத்தில் பிடிபட்ட இந்திய உளவாளி குல்பூஷன் யாதவ் இதுபோன்ற தீவிரவாதத்துக்கு, குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் மலைப்பகுதிகளில் தீவிரவாத செயல்களுக்கு இந்தியாவின் ஆதரவு குறித்து ஒப்புக்கொண்டுள்ளார்.இந்தியாவில் கிளர்ச்சியாளர்கள்ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் இந்தியாவில் உள்ளனர். எனவே அவர்கள் தங்கள் உள்நாட்டு பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும். இந்தியா ஒருவருடத்துக்கு மேலாக பேச்சுவார்த்தையை நிறுத்தி உள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறது. பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று திரும்ப, திரும்ப சொல்கிறது. ஆனால் சர்வதேச சமுதாயத்தில் இருந்து ஆலோசனைகளை கேட்கிறது.இந்திய அரசு மாயம் நிறைந்தது. அது நினைத்தால் எந்த நாட்டையும் தனிமைப்படுத்திவிடும். போருக்கு ஊக்கமளிப்பது மற்றும் அதுபோன்ற நடவடிக்கைகளுக்காக இந்தியா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளது.இவ்வாறு பாகிஸ்தான் தனது பதிலில் கூறியுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply