யோசித்தவுக்கு வெளிநாட்டு செல்ல அனுமதி

jotமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வைத்திய சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, யோசித்தவின் சட்டத்தரணியால் அனுமதி கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சிகிச்சைகளுக்காக ஒரு மாதத்துக்கு அவுஸ்திரேலியா செல்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மோசடி வழங்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் யோசித்த ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply