இலங்கையின் கடன்சுமையை குறைக்க 4 நாடுகள் இணக்கம்

srilankaஇலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடன்களை குறைப்பதற்கும், வட்டி குறைந்த கடன்களை ஏற்பாடு செய்வதற்கும், உலக வங்கிக்கு பரிந்துரை செய்யவும் நாடுகளின் ராஜதந்திரிகள் உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply