பிரதமர் ரணில் இன்று நியூசிலாந்து பயணம்

ranilஇன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) நியூசிலாந்து பயணமாகிறார். நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர் அந்நாட்டு பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களை சந்திக்க இருக்கிறார். இலங்கை பிரதமர் ஒருவர் முதற்தடவையாக நியூசிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு பொருளாதாரம், பிராந்திய பொருளாதாரம் உட்பட பல விடயங்கள் குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆராய உள்ளதாக தெரிய வருகிறது. இது தவிர பால்மா உற்பத்தி தொடர்பாகவும் ஆராயப்பட உள்ளது.

 

ஓக்லாந்து, வைகடோ மற்றும் வொலிங்டன் நகரங்களை அண்டியதாக இடம்பெறும் உத்தியோகபூர்வ வியாபார மற்றும் சமூக நிகழ்வுகள் பலவற்றில் பிரதமர் அடங்கலான தூதுக்குழுவினர் பங்குபற்ற உள்ளனர்.

 

பிரதமருடன் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ஹரீன் பெர்ணாந்தோ, ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாந்துபுள்ளே, பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரத் ரத்வத்தை, மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி, பிரதமரின் விசேட உதவியாளர் சண்ரா பெரேரா ஆகியோரும் நியூசிலாந்து பயணமாகின்றனர்.

 

பிரதமரின் நியூசிலாந்து விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ:

 

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால உறவை பலப்படுத்த இந்த விஜயம் வாய்ப்பாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார். புதிய அரசாங்கம் புதிய பாதையில் பயணிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒக்டோபர் முதலாம் திகதி ஒக்லாண்டில் உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். கடந்த பெப்ரவரி மாதம் நியூசிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததமை தெரிந்ததே.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply