ஒரு வீரர் பிடிபட்டார் 8 இந்திய வீரர்களை கொன்றுவிட்டோம் பாகிஸ்தான் சொல்கிறது
காஷ்மீர் மாநிலம் தட்டா பானி என்ற இடத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 8 பேரை கொன்று விட்டதாகவும், ஒருவரை பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி அங்குள்ள ‘டான்’ பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டு உள்ளது. பிடிபட்ட ராணுவ வீரரின் பெயர் சந்து பாபுலால் என்றும், 22 வயதான அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த சம்பவத்தை இந்திய அரசு மறுத்து உள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் கவுதம் பம்பாவாலாவை அழைத்து எல்லையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply