அமைச்சர் முரளீதரனின் விசுவாசிகள் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களாக நியமனம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனுடன் விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர்களில் சிலர் அக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் விசுவாசிகள் என கருதப்படும் இனிய பாரதி,மார்க்கண்,சின்னத்தம்பி ,மங்கள மாஸ்டர் ,வீரா ரியசீலன் ,ரஞ்சன்,ரொஷான் உட்பட 27 பேர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீ சேனவினால் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சயின் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சர் பேராசிரியர் விசுவ வர்ணபால தலைமையில் 4 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இக் குழுவே இவர்களிலிருந்து தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை கடந்த திங்கள் கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீ சேன வினால் திறந்து வைக்கப்படடது.

மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயங்களாக ஏற்கனவே செய்ல்பட்டு வரும் காரியாலயங்களில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவுக் காரியாலங்களும் தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காரியாலயமாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பெயர்ப் பலகை அழிக்கப்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காரியாலயங்கள் என குறிப்பிடப்பட்ட பெயர் பலகைகள் தற்போது காணப்படுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply