மாத்யூ புயல் எதிரொலி – புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி: அதிபர் ஒபாமா அறிவிப்பு
வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘மேத்யூ’ என்ற புயல் லத்தீன் அமெரிக்க நடானா ஹெய்தி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை துவம்சம் செய்தது. அங்குள்ள மரங்கள், வீடுகளை இடித்துத் தள்ளி ஆற்றுக்குள் கொண்டுத் தள்ளியது. தற்போது இந்த மேத்யூ புயல் புளோரிடாவை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க நேரப்படி நள்ளிரவு முதல் எந்தநேரத்திலும் புளோரிடாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மேத்யூ புயல் உங்களை கொன்றுவிடும் என்று எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், மாத்யூ புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை அமெரிக்க அதிபர் ஒபாமா றிவித்துள்ளார்.
பேரிடரின் போது அனைத்து வகையிலும் பாதுகாப்பு மற்றும் பெடரல் எமர்ஜென்சி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தனது உத்தரவில் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply