ஹிட்லர் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தார்: புதிய புத்தகத்தில் தகவல்

hitlerஉலக வரலாற்றில் மிக கொடூரமான சர்வாதிகாரியாக அடோல்ப் ஹிட்லர் வர்ணிக்கப்படுகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் இரண்டாம் உலகப்போரின் போது ‘நாஜி’ படைகள் மூலம் கோலோச்சினார்.இவரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.ஆனால் அவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார் என்ற புதிய தகவல்வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விருது பெற்ற எழுத்தாளர் நார்மன் ஓக்லர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ‘டிரக்ஸ் இன் நாஜி ஜெர்மனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இதில் சர்வாதிகாரி ஹிட்லர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில், ஹிட்லர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்தார். ஹெராயின் போன்ற ‘இயூகோடெல்’ என்ற ஒருவித போதை பொருளை உட்கொண்டு வந்தார்.

மேலும் போதை மருந்துகளை ஊசி மருந்து மூலம் உடலுக்குள் செலுத்தினார். அதனால் அவரது ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் அனைத்தும் படிப்படியாக செயல் இழந்து விட்டன. அதன் பாதிப்பு கடந்த 1944-ம் ஆண்டில் தெரியவந்தது.

போதைபொருள் பழக்கமே இரண்டாம் உலகப்போரின் மீது தவறான முடிவுகள் எடுக்க செய்ததும், தான் ஒரு அதிமேதாவி என்ற அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையின் மூலம் பின்னடைவை ஏற்படுத்தி அவரது வாழ்வில் துயரமான முடிவை மேற்கொள்ள செய்தது என கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply