முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிய அப்போலோ வந்தார் ராகுல்காந்தி

jeகாய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் ஜெயலலிதா சென்னைragul கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய அப்போலா மருத்துவமனைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வந்துளார். சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்துள்ள ராகுல்காந்தி, அப்போலோ மருத்துவமனைக்குக்கு காலை 11.45 மணியளவில் வந்துள்ளார். அங்கு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவர் கேட்டறிகிறார். ராகுல்காந்தியின் வருகையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply