இரண்டாம் கட்ட மனிதாபிமான நடவடிக்கைக்கு படையினர் தயார் ஹிட்லரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன்

வன்னியில் இரண்டாம் கட்ட மனிதாபிமான நடவடிக்கைக்குப் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்களை மீட்பதற்கான இந்த நடவடிக்கை எந்தவேளையிலும் ஆரம்பிக்கப்படலாமென்றும் அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்த மனிதாபிமான நடவடிக்கை முற்றிலும் பொதுமக்களை மீட்கும் நோக்கத்தைக்கொண்டதாகு மென்றும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மிக நிதானமாக இது முன்னெடுக்கப்படு மென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

ஹிட்லரின் கடைசி நாட்கள் போன்று தான் இன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்தினுள் மக்கள் மத்தியில் தனது இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். புலிகளின் தலைமைகள் இன்று மக்களுடன் மக்களாக இருந்து கொண்டு சர்வதேசத்துக்கு பொய்யான தகவல்களை வழங்கி வருகிறார்கள். அங்கு பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

எமது படையினர் மிகவும் நேர்மையாக யுத்த விதிகளை கடைப்பிடித்தே செயற்படுகிறார்கள் மக்கள் செறிந்துள்ள பகுதிகளில் ஷெல் வீச்சுக்களை நடத்தவில்லை. அவ்வாறு கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவல்களே.

மேலும் போர் நிறுத்தம் ஒன்றை செய்யும் எண்ணம் எமக்கு கிடையாது. இதற்கான அழுத்தம் எவரும் எமக்கு செய்யவும் இல்லை என செய்தியாளர் ஒருவர்கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார்.

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை எவ்வித பாதிப்பும் இன்றி எப்போது எப்படி மீட்பார்கள் என்ற திட்டம் படையினரிடம் உள்ளது. சரியான நேரத்தில் அதனைச் செய்வார்கள் என்றும் கூறினார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கை பாரிய வெற்றி பெற்றுள்ளது. புலிகளிடமிருந்த முழு நிலப்பரப்பும் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களை மீட்டு பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அதனைத் தொடர்ந்து பாரிய அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசு விசேட நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கும்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்த நடவடிக்கைக ளுக்கு அரசு மிகப் பெரும் தொகைப் பணத்தைச் செலவிடுகின்றது. கடந்த வருடம் 164 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வருடம் 171 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டாலும் அதன் பலன் நாட்டுக்குக் கிட்டியுள்ளது. மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள புலிகளையும் விரைவில்அழித்து நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்து வோம்.

யுத்தச் செலவுகளுக்கு மத்தியிலும் பொது மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை நாம் குறைத்து விடவில்லை. இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையில் 25000 மில்லியன் ரூபாவுக்கு உர மானியம் வழங்கியுள்ளோம். கடந்த வருடத்தில் எமது நாட்டின் விவசாய உற்பத்திகள் 23 சத வீதத்தால் உயர்ந்துள்ளன. அதனால்தான் உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தை எமது இலங்கை மக்கள் வெகுவாக உணரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply