சிரியாவில் ஜிஹாத் குழுக்கள் ஒன்றிணைவு

jigathiசிரியாவின் பலம்மிக்க ஜிஹாத் குழுக்களில் ஒன்றான ஜுன்த் அல் அக்ஸா குழு அந்நாட்டின் முன்னாள் அல் கொய்தா கிளையான பதாஹ் அல் ஷாம் முன்னணியுடன் இணைந்துள்ளது. கடும்போக்கு சலபிக்களான ஜுன்த் அல் அக்ஸாவை அமெரிக்கா அண்மையில் தீவிரவாத பட்டியலில் சேர்த்தது. வட மேற்கு இத்லிப் மாகாணத்தில் இந்த இரு குழுக்களும் இணைந்து பல தினங்களாக தீவிர மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான முரண்பாடுகளை களைய முயற்சிக்கப்படுவதாக ஜுன்த் அல் அக்ஸா அறிவித்துள்ளது. இதன்மூலம் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்கள் பலவீனமடைவதை தவிர்க்க முடியும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் இடம்பெறும் மோதல்களை சாதகமாக பயன்படுத்தியே அரச படை அண்மைக்காலத்தில் முன்னேற்றம் கண்டு வருவதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு குழு குறிப்பிட்டுள்ளது.

 

இந்த ஒன்றிணைவு ஜுன்த் அல் அக்ஸா குழுவினர் பதாஹ் அல் ஷாம் முன்னணியிடம் பாதுகாப்பு கோருவதையே காட்டுகிறது என்று சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply