புலிகளின் தடையை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்கள் வருகை
புலிகளின் மிகக்கடினமான தடைகளை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு இன்று (ஏப். 10) வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு புலிகள் கட்டுப்பாடுகளை மீறி பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த 301 பொதுமக்களும் புதுக்குடியிருப்பில் உள்ள படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையினை படையினர் மேற்கொண்டுள்ளதாக அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : ஒலி-ஒளி செய்திகள்You can leave a response, or trackback from your own site.
Leave a Reply