சார்க் நாடுகள் அமைப்பு: இந்தியாவுக்கு போட்டியாக புதிய அமைப்பை தொடங்க பாகிஸ்தான் முயற்சி சீனா, ஈரானிடம் ஆதரவு கேட்கிறது

201610130149514489_indiacompetitivelynew-organizationto_secvpf‘சார்க்’ அமைப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதற்காக சீனா, ஈரான் நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் நாடி இருக்கிறது. கடந்த மாதம் 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

 

பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியாக அடுத்த மாதம் இஸ்லாமாபாத் நகரில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இதே காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகியவையும் இந்த மாநாட்டை புறக்கணித்தன.

 

இதனால் 2016–ம் ஆண்டுக்கான சார்க் மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை பெற்றிருந்த நேபாளம், மாநாட்டை ரத்து செய்வதாக அறிவித்தது. இது சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது.

 

புதிய அமைப்புக்கு திட்டம்

 

இதனால் தெற்காசியாவில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக சீனாவின் தலைமையில் ஈரான் உள்ளிட்ட நாடுகளை இணைத்து சார்க் அமைப்பை விட பெரியதொரு அமைப்பை உருவாக்கிட பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறது.

 

சமீபத்தில் வாஷிங்டன் சென்ற பாகிஸ்தான் எம்.பி. முசாஹித் ஹூசேன் சையத் அங்கு நிருபர்களிடம், தெற்காசிய நாடுகளின் மிகப்பெரிய அமைப்பு ஏற்கனவே உருவாகிவிட்டதாகவும், இது சீனா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய குடியரசு நாடுகள் அடங்கியதாகவும் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

 

இந்த தகவலை பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார்.

 

எனினும், இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

 

பாகிஸ்தான் நம்பிக்கை

 

சீனா–பாகிஸ்தான் இடையே பல ஆயிரம் கிலோ மீட்டர் தூர அளவிற்கு பொருளாதார வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை மத்திய ஆசிய குடியரசு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.

 

எனவே, இந்த நாடுகளின் ஆதரவையும் திரட்டி மிகப்பெரிய அமைப்பை உருவாக்கினால் தெற்காசியாவில் இந்தியா ஆதிக்கத்தை தடுக்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply