செக்ஸ் புகார்கள் எதிரொலி: போப் ஆண்டவரின் நிதி ஆலோசகரிடம் போலீஸ் விசாரணை

போப் ஆmolestண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல் (வயது 75). ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இவர் போப் ஆண்டவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.தற்சமயம் 40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள், 1970-ம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து, கார்டினல் ஜார்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் கூறினர்.இதே போன்று 1980-ம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜார்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபுரிந்தபோது, உள்ளூர் மத குருமார் மீது வந்த பாலியல் புகார்களை அவர் சரியான விதத்தில் கையாள வில்லை என்றும் புகார் கூறப்பட்டது.

இந்த புகார்கள் குறித்து, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண போலீசார், வாடிகனுக்கு கடந்த வாரம் நேரில் சென்று, ஜார்ஜ் பெல்லிடம் விசாரணை நடத்தினர்.

இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் அமரா பாஸ்டாக் கூறுகையில், “விக்டோரியா போலீசார் 3 பேர் வாடிகனுக்கு சென்றனர். அங்கு கார்டினல் ஜார்ஜ் பெல், தாமாக முன்வந்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெறும். இது தொடர்பாக கூடுதலாக எதுவும் இப்போது கூற முடியாது” என்று குறிப்பிட்டார்.

கார்டினல் ஜார்ஜ் பெல்லின் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “கார்டினல் ஜார்ஜ் பெல் தன்மீதான செக்ஸ் புகார்கள் குறித்து மீண்டும் மறுப்பு வெளியிட்டார். விசாரணை முடியும் வரையில் விக்டோரியா போலீசாருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கருத்து தெரிவித்த போப் ஆண்டவர் பிரான்சிஸ், “விசாரணை நடந்து முடியும் வரையில் காத்திருப்போம்” என குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply