கூட்டமைப்பின் சம்பந்தன் குழு இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்திக்குமாம்
இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்திப்பதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் இது தொடர்பாக விடுத்திருந்த அழைப்பை நிராகரிப்பது என நேற்று முன்தினம் இரவு கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்திருந்த போதிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் சந்திப்பது என்று தற்பொழுது முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் கூறினார்.
“இருப்பினும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டார்கள்.தற்போது இந்தியாவில் தங்கியுள்ள இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இச்சந்திப்பில் கலந்து கொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.
இந்தியா விட்ட தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவை இருப்பதால் இச்சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தனர். இதற்கு மதிப்பளிக்கும் வகையிலேயே ஏற்கனவே எடுத்த முடிவைப் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும் பீ.அரியநேத்திரன் குறிப்பிட்டார். அதே வேளை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று இந்தியா பயணமானார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply