லண்டன்-எய்ம்ஸ் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை

jeyaஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.சிங்கப்பூரில் இருந்து வந்த பிசியோதெரபி நிபுணர்களின் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.இதற்கிடையே, 2 முறை லண்டன் சென்று வந்த டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சென்னை வந்து, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். எய்ம்ஸ் டாக்டர்களில் கில்நானி மட்டும் சென்னையில் இருந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்து வருகிறார்.

பிசியோதெரபி நிபுணர்களில் ஒருவரான சீமா சிங்கப்பூர் திரும்பி விட்டார். மேரி சியாங் மட்டும் அப்பல்லோ பிசியோதெரபி நிபுணர்களுடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றார். நேற்று முன்தினம் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர் கில்நானி மற்றும் பிசியோதெரபி நிபுணர்கள் அனைவருமே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 35 நாட்கள் ஆகிறது. நேற்று காலை 10 மணிக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக அப்பல்லோவுக்கு வந்தார்.

பின்னர், அவர் பகல் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து மாலை 5.30 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அதேபோல் எய்ம்ஸ் டாக்டர் கில்நானியும் (நுரையீரல் சிகிச்சை நிபுணர்) முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தார். அவர் மாலை 4 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு சென்றார். பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் மாலை 5.30 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply