எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜ் அனுமதி
நீரிழிவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுஷ்மா சுவராஜ்க்கு நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஷ்மா சுவராஜ்க்கு நீரிழிவு நோய் மற்றும் சில பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்காக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply