அமெரிக்க தேர்தல் இரவின் கால அட்டவணை
அமெரிக்க தேர்தல் வாக்குப் பதிவு எப்போது முடிவடையும், கடும் போட்டியுள்ள மாநிலங்களில் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் மற்றும் வெற்றியாளர் யார் என்பதை எவ்வளவு விரைவில் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது போன்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய தருணங்கள் குறித்த வழிகாட்டி இது.தங்கள் நாட்டின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க, இன்று செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 8) அதிபர் தேர்தலை அமெரிக்கா சந்திக்கிறது.
அமெரிக்காவின் 45-வது அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வுகளின் தருணங்கள் குறித்த வழிகாட்டி இது. (இதில் குறிப்பிடப்பட்டுள்ள நேர அளவுகள் அனைத்தும் ஜிஎம்டி நேரப்படி குறிப்பிடப்பட்டுள்ளது . ஜிம்டி என்பது= அமெரிக்காவின் கிழக்கு பகுதி + 5 மணி நேரம்) ( இந்திய , இலங்கை நேரங்கள் ஜிஎம்டி நேரத்தை விட 5.30 மணி கூடுதல் ஆகும்.
வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்?
கிழக்கு மாநிலங்களில் தேர்தல் வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் ஜிஎம்டி 1100 ஜிஎம்டி அல்லது 1200 மணி அளவில் தொடங்கிவிட்டது.
நாட்டின் மேற்கு நோக்கி நகர்ந்தால், மற்ற மாநிலங்கள் நாள் முழுவதும் வாக்குப்பதிவு செய்து கொண்டிருக்கும் போது, மேற்கு மாநிலங்களான அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகியவற்றில் மட்டும் 1700 மணிக்குத் தான் மக்கள் வாக்குப் பதிவு செலுத்த ஆரம்பிக்கின்றனர்.
நாடு முழுவதும் நடக்கும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், நாள் முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் உத்தேச முடிவுகளை அமெரிக்க தொலைக்காட்சிகளும், செய்தி நிறுவனங்களும் வெளியிடும்.
முக்கிய தேர்தல் முடிவுகள் நமக்கு எப்போது கிடைக்கும்?
ஜிஎம்டி நேரப்படி 00.00 மணிக்கு கடும் போட்டியுள்ள ஃபுளோரிடா மாநிலம் முதலில் வாக்குப்பதிவு செய்யவுள்ளது.
அதிக மக்கள் தொகையில் மாநிலமாக விளங்குவதால், இம்மாநிலத்தில் 29 தேர்தல் அவை வாக்குகள் இருப்பதாலும், ஃபுளோரிடா மாநில தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.
அதிபர் வேட்பாளர் ஆதரவு அம்சத்தில் ஊசலாடும் நிலையில் உள்ள ஃபுளோரிடா மாநிலம் இம்முறை எவ்வாறு வாக்களிக்கப் போகிறது என்பதை கணிப்பது மிகவும் சிரமமாகும்.
ஜிஎம்டி நேரப்படி 00.30 மணிக்கு ஓஹியோ மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிவடைகிறது. கடந்த 1964-இல் இருந்து, கடந்த 13 அதிபர் தேர்தல்களாக, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வெற்றியாளரையே இந்த மாநிலம் இறுதியில் தேர்தெடுத்துள்ளது.
ஆதலால், பராக் ஒபாமாவை அடுத்து அமெரிக்க அதிபராக பதவியேற்க போகும் நபர் யார் என்பதன் அறிகுறியை இந்த முக்கிய மாநிலம் நமக்கு தரக்கூடும்.
இவ்வேளையில், வடக்கு கரோலினா மாநிலத்தின் தேர்தல் உத்தேச முடிவுகள் வெளியிடப்படலாம். இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் மாறி மாறி இந்த மாநிலம் வாக்களித்துள்ளது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தல்களில், 2004-இல் ஜார்ஜ் டபுள்யூ. புஷ்யையும், 2012-இல் மிட் ரோம்னியையும் இந்த மாநிலம் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிஎம்டி நேரப்படி 01.00 மணிக்கு பென்சில்வேனியா மாநிலத்துக்கு எண்ணற்ற தொலை தொடர்ப்பு அழைப்புகள் செய்யப்படக்கூடும். 1988-ஆம் ஆண்டில் இருந்து, தொடர்சியாக கடந்த 6 தேர்தல்களில் இந்த மாநிலம் ஒரு குடியரசு கட்சி வேட்பாளரை தேர்தெடுத்ததில்லை. இந்த நேரத்தில் கூட இந்த மாநிலம் ஜனநாயக கதிக்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது.
ஜிஎம்டி நேரப்படி 02.00 மணி: நியூ மெக்சிகோ மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடையும் நேரம். பெரும்பான்மை மக்களுடன் ஒத்துப்போகும் விதமாக அப்பழுக்க முறையில் சாதனை புரிந்துள்ள இந்த மாநிலம், கடந்த 26 அதிபர் தேர்தல்களில் 24 தேர்தல்களில் இறுதியாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டவரையே, தேர்தெடுத்துள்ளது.
ஜிஎம்டி நேரப்படி 03.00 மணி: நெவாடா மாநிலத்தின் உத்தேச தேர்தல் முடிவுகள் வெளியிடப்படலாம். 1980-இல் இருந்து ஓவ்வொரு தேர்தலிலும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரையே இந்த மாநிலம் இறுதியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்த மாநிலத்தின் தேர்தல் கருத்துக் கணிப்புகள் இது வரை ஒரு கத்தி முனையில் உள்ளது.
அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பது நமக்கு எப்போது தெரியும்?
ஜிஎம்டி 0400 முதல் 0500 மணி வரையிலான நேரத்தில், 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தெரிய வரும்.
பொதுவாக அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தவர், வெற்றி பெற்றவரை தொலைபேசியில் அழைத்து தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான நடைமுறையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply